திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுபடி, திருச்சி மாநகர எல்லைக்குட்பட்ட காவல்நிலைய பகுதிகளில் அரசின் ஊரடங்கு தடை உத்தரவை மீறி இன்று முகக்கவசம் அணியாத நபர்கள் மீதும் சமூக இடைவெளியினை கடைப்பிடிக்காத 100-க்கும் மேற்பட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுநாள் வரை 5177 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.




இன்று மட்டும் 450-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஆவணங்கள் அல்லது இ-பதிவு சான்று ஆகியவற்றினை போலியாக தயாரித்து பயன்படுத்துவோர்கள் கைது செய்யப்பட்டு சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும். எனவும் பொதுமக்கள் அரசின் கொரோனா நோய் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டுமென திருச்சி மாநகர காவல் கமிஷனர் அருண் கேட்டுக்கொண்டுள்ளார்.