தி.மு.க தலைவரும் முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதி அவர்கள் ஆட்சியில் இருந்தபோது, மூன்றாம் பாலினத்தவர்களை ’திருநங்கைகள்’ என அழைக்கும் சட்டத்தை இயற்றினார். தற்போது திமுக தலைவர் மு க ஸ்டாலின் தமிழக முதல்வராக இன்று பதவி ஏற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து இன்று அவர் 5 கோப்புகளில் கையெழுத்திட்டார் அதில் ஒன்று பஸ்களில் பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யலாம் என அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இந்நிலையில் மகளிருக்கு வழங்கிய சலுகைகள் போலவே திருநங்கைகளுக்கும் சலுகைகள் வழங்கக்கோரி தமிழ்நாடு திருநங்கை நல வாரிய முன்னாள் உறுப்பினர் கஜோல் சிஎம் செல்லுக்கு மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில் கூறப்பட்டிருப்பதாவது…
மான்புமிகு தமிழக முதல்வர் மு.க . ஸ்டாலின் ஜயா அவர்களுக்கு வணக்கம்…. தாங்கள் தமிழக மக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு வழங்கும் அரசு சலுகைகளை எங்களுக்கும் ( திருநங்கை ) பொருந்துமாறு அறிவியங்கள் . தற்பொழுது கட்டனம் இல்லா பஸ் பயன சலுகையை திருநங்கைகளான எங்களுக்கும் பொருந்துபடியாக அறிவியுங்கள் ஜயா . அதேபோல் பரம்பரை சொத்துக்களை ஆண்பிள்ளை, பெண் பிள்ளைகளுக்கு வழங்குவது போல் திருநங்கைகளுக்கும் கொடுத்தாக வேண்டும் என்ற ஆனை பிறப்பிக்கும்படியாக விண்ணப்பிக்கிறேன் ஜயா, திருநங்கை சமுதாய மக்களுக்கு அங்கன்வாடி . சத்துணவு , கலைஞர் உணவகம் . சிந்தாமனி , கூட்டுறவு , ஆவின்பால் போன்றவற்றில் வேலைவாய்பில் முதலிடம் தர வேண்டுகிறேன் ஜயா . மேற்கன்டவற்றை தாங்கள் பரிசிலனை செய்து நிறைவேற்ற வேண்டுகிறேன் நன்றி ஜயா.
உன்மையுடன்
காஜல்
முன்னால் தழிழ்நாடு திருநங்கை நல வாரிய உறுப்பினர்