சென்னையில் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு சார்பில் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் சார்பாக நடத்திய ஆய்வில் தமிழ்நாட்டிலேயே முகேஷ் ஆர்த்ரோ கேர் மருத்துவமனை எலும்பு மூட்டு சிகிச்சையில் சிறந்த மருத்துவமனையாக தேர்வு செய்யப்பட்டு தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் அவர்களால் சிறந்த மருத்துவமனைக்கான விருதை டாக்டர் . முகேஷ் மோகன் அவர்களுக்கு வழங்கி சிறப்பித்தார் .
அதனைத் தொடர்ந்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில்:-
தமிழக முதலமைச்சரின் லட்சிய நோக்கம் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம். அந்த வகையில், தொழில் நிறுவனங்கள் மருத்துவ துறையில் ஈடுபாட்டை காட்ட வேண்டும் அதன் மூலம் வளர்ச்சியை காண வேண்டும். மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் தமிழ்நாட்டில் 96 லட்சம் பேர் வீட்டில் இருந்து கொண்டே மருத்துவம் பெற்றுள்ளனர். தமிழகத்தை தவிர வேறு எந்த மாநிலத்திலும் மருத்துவ சாதனை நடைபெறவிலை என பாராட்டுகிறார்கள். மருத்துவ உபகரணங்களை தமிழகத்தில் தயாரிக்கும் பணியினை மேற்கொள்ளவேண்டும். இதற்கு தமிழக அரசு உறுதுணையாக இருக்கும் என்றும் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்புக்கு உறுதியளித்தார்.