அகில இந்திய எல்ஐசி முகவர்கள் சங்கத்தின் 2-வது கிளை மாநாடு திருச்சியில் இன்று நடந்தது. இந்த மாநாட்டிற்கு மாநிலத் தலைவர் பூமிநாதன் தலைமை தாங்கினார். துவக்க உரையாக மாநில செயலாளர் ராஜா சிறப்புரை ஆற்றினார் அதனைத் தொடர்ந்து சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் ரங்கராஜன் தஞ்சை கோட்ட பொதுச் செயலாளர் கோபாலகிருஷ்ணன் துணை செயலாளர் துரைராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக செயற்குழு உறுப்பினர் இந்திராணி வரவேற்புரையாற்றினார்.
இந்த எல்ஐசி மாநாட்டின் தீர்மானமாக:-
எல்ஐசியில் பங்கு வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும், அதேபோல் முகவர்களை பாதிக்கக்கூடிய ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும், இதே மாதிரி முகவர்களுக்கான குழு காப்பீட்டை 25 லட்சமாக உயர்த்த வேண்டும், அனைத்து முகவர்களுக்கும் மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் மற்றும் மன்ற முகவர்களுக்கான விதிமுறையில் தளர்வுகளை ஏற்படுத்த வேண்டும், அதுமட்டுமில்லாம பாலிசிதாரர்கள் செழுத்தக்கூடிய பிரீமியத்தில் இருக்கக்கூடிய ஜிஎஸ்டி வரியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும், கேரளாவில் தொழிலாளர்களுக்கான தனி நல வாரியம் முகவர் சங்க ஏற்பாட்டில் அமைக்கப்பட்டுள்ளது.
அதே போன்று தமிழகத்திலும் முகவர்களுக்கு என்று நல வாரியம் அமைக்க வேண்டும், ஐபிஓ எல்ஐசியில் உடைய பங்குகளை பங்குச் சந்தையில் பட்டியலிடுவது என்ற முயற்சியை மத்திய அரசு எடுத்திருக்கிறது இந்த முயற்சியை முழுவதுமாக கைவிட வேண்டும் என்று லிகாய் சங்கம் கேட்டுக் கொள்கிறது. எல் ஐ சி என்பது தனியார்மயம் இல்லை இதை புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது அரசாங்கத்தினுடைய 5 சதவீத பங்குகளை விற்பனை செய்கிறார்கள் இது பொதுமக்களின் பணம், இதில் கிடைக்கும் லாபம் எல்லாம் மக்களுக்கு 100% வந்து சேரும் 5 சதவீதம் பட்டியலிடும் போது இது பாலிசிதாரருக்கு இல்லாமல் ஷேர் ஹோல்டர் இருக்கு போய் சேர கூடிய ஆபத்து இருக்கிறது. அதனால் 100 சதவீதமும் மக்கள் பணம் மக்களுக்கே என்ற அடிப்படையில் மக்களுக்கு வந்து சேரனும் மேலும் இது பொது துறையாக நீடிக்க வேண்டும் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது