அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழகம் சார்பாக இன்று நவல்பட்டு காவல் நிலையத்தில் பணியாற்றிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், குற்றவாளிகளை சிறையில் இருக்கும்போதே தண்டனை வழங்க வேண்டியும் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் அதன் தலைவர் வழக்கறிஞர் பொன். முருகேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வீர முத்தரையர் முன்னேற்ற சங்க தலைவர் செல்வகுமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அதனைத் தொடர்ந்து அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழகம் தலைவர் வழக்கறிஞர் பொன். முருகேசன் பேசுகையில்:-
கடந்த சில தினங்களுக்கு முன்பாக நவல்பட்டு காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் கொலை செய்யப்பட்டது மிகவும் கண்டிக்கத்தக்க செயல். அந்த குற்றவாளிகளை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். அவர்களை சிறையில் இருக்கும்போதே தண்டனைகள் தமிழக அரசு வழங்க வேண்டும். காவல்துறைக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண பொதுமக்களுக்கு எப்படி நடக்கும் என்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். மேலும் உண்மையான குற்றவாளிகளை தமிழக அரசு கண்டறிய வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைகளை உயர்த்தியவாறு கோஷமிட்டனர்.