திருச்சி எஸ்.ஆர்.எம். ஹோட்டலில் ஸ்ரீலங்கன் யாழ் உணவு திருவிழா இன்று தொடங்கியது. இத்திருவிழா இன்று (ஆகஸ்ட் 18ஆம் தேதி) முதல் வரும் 27 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஸ்ரீலங்கன் யாழ் உணவு வகைகள் அனைத்தும் சரியான விலையில், தினமும் மதியம் மற்றும் இரவு நேரத்தில் வேலைகளில் வழங்கப்படுகிறது. ஸ்ரீலங்கன் யாழ் உணவின் சுவை மற்றும் ரகசியங்களை திருச்சி மக்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற வகையில் இத்திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உண்மையான ஸ்ரீலங்கன் பாணியிலான நல்ல உணவை ருசித்து, அனுபவித்து திருச்சி மக்கள் சாப்பிடவேண்டும் என்பதற்காக, திருச்சி எஸ்.ஆர்.எம்.ஹோட்டலில் தக்ஷின் நக்ஷத்திரா ஸ்பெஷாலிட்டி ரெஸ்டாரண்டில் 80 இருக்கை வசதிகள் செய்துக்கொடுக்கப்பட்டுள்ளன.ஸ்ரீலங்கன் யாழ் உணவு வகையை சேர்ந்த, மாசி சம்பல் பிரியாணி வகைகள், ஆட்டுக்கால் பாயா, சிலோன் சிக்கன் கறி, கண்டி மட்டன் குருமா, சிலோன் புரோட்டா, லேம் ரைஸ், நெத்திலி மீன் வறுவல், வட்டாலப்பம், தொதல் அல்வா, நவதானிய லட்டு என யாழ் சுவையுடன் சைவ அசைவ உணவுகள் தயாரித்து வைக்கப்பட்டுள்ளன.

விருந்தினர்கள் தங்களது விருப்பத்திற்கேற்ப எடுத்து சுவைத்து, மறக்க முடியாத அனுபவத்தை பெற்றுக்கொள்ள முடியும். நிஜமான இலங்கை உணவின் சுவை விருந்தினர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதற்காக, தயாரிக்கப்பட்ட உணவுக்கான அனைத்து பொருட்கள் மற்றும் மல்லிகை பொருட்கள் இலங்கை யாழ்ப்பாணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்டிருக்கிறது.

ஸ்ரீலங்கன் யாழ் பாணியில் மதியம் உணவு மற்றும் இரவு உணவை தயாரித்து வழங்கும் பணியில் ஸ்ரீலங்கன் சமையல் கலைஞர்கள் சந்திரகாந்தா, சர்மலதா மற்றும் நிர்வாக சமையல் கலைஞர் ராஜசிவநேசன், சமையல் கலைஞர் சீனிவாசன் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர். திருச்சி எஸ்.ஆர்.எம். ஹோட்டல் யாழ் உணவு திருவிழா மறக்க முடியாத அனுபவத்தை தனது விருந்தினர்களின் மனதிலும், நாவிலும் ஏற்படுத்திக்கொடுத்துள்ளது.

அங்கு விருந்தினர்களின் கண்களை கவரும் வண்ணவிளக்குகள், அலங்கார தோரணங்கள், ஊழியர்களின் அன்பான உபசரிப்பு, இசை, பாடல்கள் என வயிருடன் மனமும் நிறைந்துவிடுகிறது. நாட்டின் பல்வேறு பிராந்திய மற்றும் சர்வதேச உணவு வகைகளின் கலவையை திருச்சி மக்களுக்கு ஒரே இடத்தில் வழங்கும் பணியை எஸ்.ஆர்.எம்.ஹோட்டல் தொடர்ந்து முன்னெடுத்துக்கொண்டே செல்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்