திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் தலைமையில் இன்று நடைபெற்றது இந்த கூட்டத்தில் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் புரவலர் பூ விசுவநாதன் தலைமையில் விவசாயிகளின் கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் அளிக்கப்பட்டது அந்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
அரியாறு உபகோட்டம் துறையூர் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கீழ்க்கண்ட ஏரிகளான நாகநாயகப்பட்டி ஏரி, துறையூர் பெரிய ஏரி, சிக்கந்தம் பூர் ஏரி, கீரம்பூர் ஏரி, சூராமாரி வாரி, வெங்கடாசலபுரம் ஏரி, சிக்காளந்தாபுரம் ஏரி, துறையூர் சின்ன ஏரி, ஜம்பேரி ஏரி, ஒக்கரை ஏரி, சிறு நாவலூர் ஏரி, ரெட்டியாபட்டி ஏரி, ஜம்பு மடை ஏரி, பிடாரி மங்கலம் ஏரி ஆகிய ஏரிகளின் வடிகால் வாய்க்கால் போன்ற பணிகள் தூர்வாரி புணரமைக்க ரூபாய் 3 கோடி ஒதுக்கப்பட்டும் மேற்படி பணிகள் முழுமையாக முடிக்கப்படவில்லை ஆனால் முடிக்கப்பட்டதாக பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதாக அந்தந்த பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் தெரிவித்துள்ளனர் எனவே நேர்மையான அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டு துறை ரீதியான நடவடிக்கை எடுக்கக் கோரியும்,
திருச்சி மாவட்டத்தில் சம்பா நெல் சாகுபடி துவங்க பணிகள் ஆரம்பித்துள்ளனர் பயிர் கடன் காலதாமதப்படுத்தாமலும் தடையின்றி உரம் நெல் விதைகள் கிடைக்க வேண்டுமென்றும் நெல் சாகுபடி விவசாயிகளின் உற்பத்தி செலவு குறைக்க நெல் வரிசை நடவு செய்பவர்களுக்கு ஏக்கருக்கு ரூபாய் 6000 நடவு மானியம் வழங்க வேண்டும் எனவும் திருச்சி மாவட்டத்தில் தூருவாருகின்ற பணிகள் தடுப்பணை கட்டும் பணிகள் மழைக்காலத்திற்கு பிறகு செய்யப்படுதல் வேண்டும் என்று வலியுறுத்தி மனுக்கள் அளிக்கப்பட்டது.