தேசிய நெடுஞ்சாலை – 67 சுற்றுச்சாலைக்காக 10 ஏரிகளில் போடப்பட்ட சட்டவிரோத சாலைகளை அகற்றி மேம்பாலங்கள் கட்ட வரும் 2026 மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வலியுறுத்தி திருச்சி கருமண்டபத்தில் உள்ள இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முன்பு தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் தலைவர் சின்னத்துரை தலைமையில் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏரிகளை காப்போம் நீர் உரிமை காப்போம் என முழக்கங்களை எழுப்பி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்தப் போராட்டத்தில் தண்ணீர் இயக்கம் நீலமேகம்,சமூக ஆர்வலர் ஓவியர் கஸ்பர் மற்றும் திரளான விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
