திருச்சி விமான நிலைய பகுதி அருகே கடந்த 50 ஆண்டு காலத்திற்கும் மேலாக குடியிருக்கும் மக்களுக்கு குடிமனை பட்டா வழங்க கோரி சி பி ஐ எம் மாவட்ட செயலாளர் ராஜா தலைமையில் பொதுமக்கள் திருச்சி கிழக்கு வட்டாட்ச்சி தாசில்தாரிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்திற்கு பொன்மலை பகுதி செயலாளர் விஜயேந்திரன் தலைமை தாங்கினார். துப்புரவு சங்க மாவட்ட செயலாளர் மணிமாறன் மற்றும் விவசாய அணி மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்தப் போராட்டத்தின் கோரிக்கைகளாக:- திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட விமான நிலையம் அருகே உள்ள காமராஜர் நகர் பகுதி பாரதியார் தெரு சோழன் தெரு பாண்டியன் தெரு சங்கத்தேர் மாதிரி தெரு திலகர் தெரு திரு வி சி கா தெரு அழகர் தெரு மாரியம்மன் கோவில் தெரு பாரதியார் நகர் முஸ்லிம் தெரு நாய் நகர் உள்ளிட்ட வார்டு எண் 61 65 ஆகிய பகுதிகளில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் 4000 மேற்பட்ட குடும்பங்கள் காலம் காலமாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக அரசு இப்பகுதியில் குடியிருந்து வரும் வீடுகள் அனைத்தும் புறம்போக்கு இடம் என்றும், காலரா கேம்ப் எனக்கூறி பத்திரப்பதிவு செய்வதற்கு அடமானம் மற்றும் விற்பனை செய்ய தமிழ்நாடு அரசு பத்திரப்பதிவுத்துறை தடை விதித்துள்ளது. இதனால் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் திருமண தேவைக்காகவும் மருத்துவ தேவைக்காகவும் அவசர தேவைக்காகவும் இடங்களை விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.
எனவே தமிழக அரசு உடனடியாக பட்டா இல்லாத அனைத்து குடியிருப்பு வாசிகளுக்கும் வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி பத்திரப்பதிவு செய்வதற்கான தடையை நீக்க கூறியும் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் பொதுமக்கள் மற்றும் குடியிருப்போர் நல சங்கங்களை சேர்ந்த புது மாலை கிழக்கு வட்டாட்சியர் அலுவலகம் அலுவலகம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.