தமிழத் திரையுலகின் முடிசூடா மன்னர் எம்.கே தியாக ராஜ பாகவதரின் 113 ஆவது பிறந்த நாள் – திருச்சி சங்கிலியாண்டபுரம் மணல்வாரி துறை ரோடு பகுதியில் உள்ள அவரது சமாதியில் நிர்வாகிகள், ரசிகர்கள் கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தமிழத்திரையுலகின் முடிசூடா மன்னராக திகழ்ந்த ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதர் அவர்களின் 113 பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. மாயவரம் கிருஷ்ணமூர்த்தி தியாகராஜபாகவதர் மக்கள் உள்ளங்களைக் கொள்ளைகொண்டமையால் எம்.கே.டி என அன்புடன் அழைக்கப்பட்டார். தான் கொண்ட பாடல்திறனால் நாடக நடிகனாக உருவாகி திரையுலகில் பிரவேசித்து தமிழ்சினிமா வரலாற்றில் தன்பாடற்திறனாலும், தேர்ந்தெடுத்து நடித்த கதாபாத்திரங்களினாலும் தனி அத்தியாயத்தை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல், அக்கால ரசிகர்கள் மனதில்நீங்கா இடம்பிடித்துவர். புவளக்கொடி, சாரங்கதா, சத்தியசீலன், சிந்தாமணி, அம்பிகாபதி, திருநீலகண்டர், அசோக்குமார், சிவகவி, ராஜமுக்தி, அமரகவி, சிவகாமி என 14படங்கள் நடித்தாலும் ஏம்.கே.டி நடிப்பில் வெளியான ஹரிதால் 3தீபாவளியை தாண்டி வெற்றிகரமாக ஓடியும், 10லட்சரூபாய் வசூலித்தும் சரித்திர சாதனைப்படைத்தது. இப்படி பல்வேறு பெருமைகளுக்குச் சொந்தக்காரரான எம்.கே.தியாகராஜபாகவதரின் 113 ஆவது பிறந்தநாள் இன்று திருச்சி சங்கிலியாண்டபுரம் மணல்வாரி துறை ரோடு பகுதியில் உள்ள அவரது நினைவிடத்தில் அவரது ரசிகர்கள், விஸ்வகர்மா மகாஜனசபை நிர்வாகிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் தீபமேற்றி வழிபட்டு, மலர்தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாண்டித்துரை கூறும்போது: சித்திரை 1 ஆம் தேதி தியாகராஜ பாகவதர் அவர்களுக்கு நினைவு மண்டபம் கட்ட அடிக்கல் நாட்டப்பட உள்ளது என்றார் மேலும் கடந்த ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்ட தியாகராஜ பாகவதரின் மணிமண்டப பணிகளை விரைவில் முடித்து திறப்புவிழா காண திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.இந்த நிகழ்வின் போது விஷ்வகர்மா மகா ஜன சபை தலைவர் குமரப்பன் ஆச்சாரி, செயலாளர் சுப்பண்ணா ஆச்சாரி, பொருளாளர் வெள்ளையன் ஆச்சாரி, துணை தலைவர் பாலசுப்பிரமணியன் ஆச்சாரி, துணை செயலாளர்கள் கந்தசாமி ஆச்சாரி, மருதமுத்து ஆச்சாரி ஆகியோர் உடனிருந்தனர்.