ஒன்றிய அரசு நிறைவேற்றிய 3 வேளாண் சட்டங்களும் விவசாயிகளின் உரிமைகளை பறித்து, கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு அடிமையாக்குபவை எனவே அச் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் சுற்றுச்சூழல் திருத்த மசோதா, மின்சார திருத்த சட்டம் ஆகிய மக்கள் விரோத சட்டங்களை திரும்பப் பெற மோடி அரசை தோலுரிக்க ஊர்கள் தோறும் மக்கள் நாடாளுமன்றம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகஸ்டு 23 முதல் 27 வரை 5000 மையங்களில் நடத்திட அறைகூவல் விட்டதன் அடிப்படையில் திருச்சி மாநகரம் உறையூரில் 55வது வார்டு குறத் தெருவில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டது பாராளுமன்ற சபை அமைக்கப்பட்ட இடத்தில் CPI மாநில நிர்வாகக் குழுமுன்னாள் உறுப்பினர் எம். செல்வராஜ்அவைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

விவசாயிகள் போராட்ட களத்தில் உயிர் நீத்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. வேளாண் சட்டம், சுற்றுச்சூழல் திருத்த மசோதா, மின்சார திருத்த சட்டம் ஆகியவற்றை முன்மொழிந்து அமைச்சர்களாக கே. ரவி, முருகேசன் வே. நடராஜா, சூர்யா, சிவா உள்ளிட்டோர் ஆதரித்து பேசினர் .எதிர்க்கட்சி வரிசையில் திமுக சார்பில் ரவி, ஆறுமுகம், ஜானகிராமன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வழக்கறிஞர் செல்வகுமார் ,துரைராஜ் இப்ராஹிம் ரவீந்திரன், பாலமுரளி , சரண்சிங் காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் ஜவஹர், விஸ்வநாதன், ராஜ்மோகன் மதசார்பற்ற ஜனதா தளம் சார்பில் பேராசிரியர் ஜான் குமார் உள்ளிட்டோர் மாண்புமிகு உறுப்பினர்களாக செயல்பட்டு சட்ட மசோதாக்களை எதிர்த்துப் பேசினர் காரசார விவாதங்கள் நடைபெற்றது.இறுதியாக ஏஐடியுசி திருச்சி மாவட்ட பொதுச்செயலாளர் சுரேஷ் 2020இல் நிறைவேற்றப்பட்ட 3 வேளாண் வணிக சட்டங்களையும் மின்சார திருத்த சட்டத்தை திரும்பப் பெறுமாறு மக்கள் நாடாளுமன்றம் ஒன்றிய அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்ளும் தீர்மானத்தை முன்மொழிந்தார்.அவையின் அனைவரது ஒப்புதலோடு ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பாராளுமன்ற செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டது தேசிய கீதத்துடன் நிறைவுற்றது.55 வது வார்டு பொறுப்பாளர் முருகன் நன்றி கூறினார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *