1971 -ம் வருட பொது இன்சூரன்ஸ் தேசிய மய சட்டத்தில் ஒன்றிய அரசு மாற்றம் செய்து 100 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்கும் வகையில், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ், நேஷனல் இன்சூரன்ஸ், ஓரியண்டல் இன்சூரன்ஸ், நியூ இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனிகளை தனியாருக்கு தாரை வார்ப்பது ஏற்றார்போல் மாநிலங்களவையில் அனைத்து எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி பொது காப்பீட்டு வர்த்தக மசோதாவை நிறைவேற்றியுள்ளது. இந்த ஜனநாயக விரோத செயலை கண்டித்து பொது இன்சூரன்ஸ் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் வியாழனன்று நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் பொது இன்சூரன்ஸ் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் அதிகாரிகள் சங்க துணைத்தலைவர் குருமூர்த்தி தலைமை தாங்கினார். இதில் மதுரை மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்க மண்டல தலைவர் ராஜமகேந்திரன், மாவட்ட செயலாளர் முத்துக்குமார், இணைச் செயலாளர் ராஜன் ,பெடரேஷன் சங்க தலைவர் நீலகண்டன், பென்ஷனர் அசோசியேஷன் தலைவர் மணிவே,ல் எஸ்.சி, எஸ்.டி நலச் சங்க தலைவர் செந்தில் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.