வருகிற மே 10ம் தேதி அதிகாலை 4 மணி முதல் மே 24ம் தேதி அதிகாலை 4 மணி வரை முழு ஊரடங்கு
அனைத்து தனியார் அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட மாட்டாது.
மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையிலான தனியார், அரசுப் பேருந்து போக்குவரத்துக்கு தடை
வாடகை டாக்சி, ஆட்டோக்கள் ஆகியவை இயங்கவும் தடை
அத்தியாவசியப் பணிக்கு செல்வோர் உரிய ஆவணங்களுடன் பயணிக்க அனுமதி
இன்றும் நாளையும் அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்கள் இரவு 9 மணி வரை இயங்க அனுமதி
உணவகங்களில் பார்சல் மட்டும் வழங்கப்படும்.
ஊரடங்கு காலமான மே 10 – 24 வரை விவசாயம் சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மதியம் 12 மணி வரை செயல்படும்.
விதை, உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள், மாட்டுத்தீவன கடைகள் செயல்படும்.
இன்று (சனி, 8ம் தேதி), நாளையும் (ஞாயிறு 9ம் தேதி) மட்டும் ஊரடங்கு இல்லை. அதனைப் பயன்படுத்தி பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- தமிழக அரசு