திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை வாசன்வேலியை சேர்ந்தவர் சிவலிங்கம் (வயது 40). வெங்காய வியாபாரி. இவருடைய மனைவி தனலட்சுமி வயது (36). மது பழக்கத்திற்கு அடிமையான சிவலிங்கம் அடிக்கடி மது அருந்தி வந்து தனது மனைவி தனலட்சுமியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்தநிலையில் நேற்று காலை கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி தகவல் அறிந்து வந்த தனலட்சுமியின் உறவினர்களான செந்தில்குமார், ஆறுமுகம், ஆறுமுகத்தின் மனைவி சுமதி ஆகியோர் சிவலிங்கத்தின் வீட்டுக்கு வந்து அவரை கண்டித்துள்ளனர்.

இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு கைகலப்பு ஆனது இதில் ஆத்திரம் அடைந்த தனலட்சுமி தனது உறவினர்களுடன் சேர்ந்து இரும்பு கம்பியால் சிவலிங்கத்தை அடித்துக்கொலை செய்தனர்.

அதனைத் தொடர்ந்து கொலை செய்யப்பட்ட சிவலிங்கத்தின் உடலை மறைப்பதற்காக வாகனத்தில் சிவலிங்கத்தின் உடலை மூட்டையாக கட்டி நாவலூர் குட்டப்பட்டு பகுதியில் உள்ள பாலத்திற்கு அடியில் வைத்து வைத்து எரிக்கலாம் என தனலட்சுமி மற்றும் அவரது உறவினர்கள் எடுத்துச் சென்றனர்.

அப்போது அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்ட காவலர் ஒருவர் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த இவர்களிடம் விசாரணை மேற்கொண்டார் அதில் தனலட்சுமி மற்றும் அவரது உறவினர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் அவர்கள் வந்த காரை போலீசார் சோதனை செய்தனர் அதில் காரின் உள்ளே சாக்கு முட்டையில் கொலை செய்யப்பட்ட நிலையில் சிவலிங்கம் உடல் இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் போலீசாரை கண்டதும் உறவினர் செந்தில்குமார் அங்கிருந்து தப்பிச் சென்றார் மற்ற சிவந்த லிங்கத்தின் மனைவி தனலட்சுமி உறவினர்கள் ஆறுமுகம், சுமதி ஆகியோரை கைது செய்த சோமரசம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *