கதிரேசன் செட்டியார் அவர்களின் 10-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி வயர்லெஸ் ரோடு சீனிவாசன் நகர் பகுதியில் உள்ள தில்லை மெடிக்கல் சென்டர் மல்டி ஸ்பெஷலிஸ்ட் கிளினிக்கில் இலவச மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது இந்த மருத்துவ முகாமிற்கு மருந்து வணிகர்கள் சங்கத்தின் தலைவர் தில்லை மனோகரன் தலைமை தாங்கினார்.

இந்த மருத்துவ முகாமில் சர்க்கரை நோய், ரத்த பரிசோதனை, ரத்தத்தின் கொழுப்பு அளவு கண்டறிதல், ரத்தத்தின் யூரிக் அமிலம் கண்டறிதல் ரத்த அழுத்த பரிசோதனை மற்றும் ரத்தத்தின் ஆக்சிஜன் அளவு கண்டறியும் பரிசோதனை, எலும்பு அடர்த்தி பரிசோதனை, நுரையீரல் செயல்பாடு சோதனை, நீரழிவு நரம்பியல் சோதனை மற்றும் தோல் நோய் சிகிச்சைகள் குறித்த பரிசோதனைகள் நடைபெற்றது.

இந்த மருத்துவ முகாமில் மருத்துவர்கள் டாக்டர் ரோஷன் ராஜ், டாக்டர் ஞானசேகரன், டாக்டர் ராமநாதன், டாக்டர் விக்னேஷ் குமார், டாக்டர் அனுசியா ஆகியோர் நோயாளிகளுக்கு எலும்பு முறிவு, மூட்டு வலி, பொது மருத்துவம், சர்க்கரை நோய், நுரையீரல் நோய், தோல் நோய், பிசியோதெரபி மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கினர். இந்த மருத்துவ முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பரிசோதனை மேற்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *