தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநில பொதுச்செயலாளர் சுந்தரம் தலைமை தாங்கினார். அதனைத்தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில்.
உயிரிழந்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஜீலை 5 ஆம் தேதி பேரணி நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு திருச்சியில் விவசாயிகள் பேரணி நடைபெற உள்ளது. அந்த பேரணியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களை அளவிட்டு இழப்பீடு வழங்க வேண்டும். வெங்காயம் சாகுபடி செய்து அதில் நஷ்டமடைந்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். அனைத்து விவசாயிகளின் கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும். நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் கனிம வள கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும். அதில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசுக்கு வலியுறுத்த உள்ளோம்.
மேலும் மேட்டூர் அணையில் இருந்து முன் கூட்டியே நீர் திறந்திருப்பதை வரவேற்கிறோம். ஆனால் தண்ணீர் முன் கூட்டியே திறக்கப்பட்டிருப்பதால் விவசாயம் மேற்கொள்ள என்னென்ன தேவை என்பதை டெல்டா மாவட்ட விவசாயிகளை அரசு அழைத்து கலந்து பேசி அவர்களுக்கு தேவையானவற்றை அரசு செய்து தர வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார்.