முத்தமிழறிஞர் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட மாநகர தொமுச சார்பாக மாரத்தான் போட்டி இன்று நடைபெற்றது இந்த மாரத்தான் போட்டியை முன்னாள் அமைச்சர் பொன்முடி கொடி அசைத்து தொடங்கி வைத்தார் அருகில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்ய்யா மொழி மாநிலங்களவை உறுப்பினர் சண்முகம் மற்றும் தொமுச நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
இந்த மாரத்தான் போட்டியானது திருச்சி ரேஸ் கோர்ஸ் சாலையில் தொடங்கி அண்ணா விளையாட்டு அரங்கை சுற்றி வந்து மீண்டும் அண்ணா விளையாட்டு அரங்கி உள்ளே நிறைவு பெற்றது. இந்த மாரத்தான் போட்டியானது மூன்று பிரிவுகளாக நடைபெற்றது முதல் பிரிவில் 8 வயது முதல் 14 வயதிற்கு உட்பட்ட பள்ளி மாணவ மாணவிகளும் இதேபோல் 14 வயதில் இருந்து 18 வயது வரை உள்ள வீரர் வீராங்கனைகளும் மேலும் 19 வயதிலிருந்து அதற்கு மேற்பட்ட நபர்களுக்கு என தனி தனியாக மாரத்தான் போட்டி நடைபெற்றது.
இந்த மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு முன்னாள் அமைச்சர் பொன்முடி பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது. மேலும் மாணவ மாணவிகள் கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றது.