திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள புனித ஜான் வெஸ்ட்ரி ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் கலை பண்பாட்டுத் துறை மண்டலக் கலை பண்பாட்டு மையம் சார்பில் தமிழ் மண்ணின் கலைகளை களிப்போடு கொண்டாடும் வகையில் திருச்சி சங்கமம் நம்ம திருவிழாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் இன்று தொடங்கி வைத்து. பார்வையிட்டு, மாவட்ட கலைமன்ற விருதுகளை வழங்கினார். “திருச்சி சங்கமம் நம்ம ஊர் திருவிழாவில்” திருச்சி, கரூர், புதுக்கோட்டை ,பெரம்பலூர் மற்றும் அரியலூர் போன்ற தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் 375க்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலைஞர்கள் பங்கேற்கும் கிராமிய பாடல்கள், பரதநாட்டியம், மயிலாட்டம்.காவடியாட்டம், சக்கைக்குச்சியாட்டம், தப்பாட்டம், தேவராட்டம், நையாண்டிமேளம், புலியாட்டம்,இறைநடனம், தப்பாட்டம். கரகாட்டம். காளியாட்டம். பல்சுவை நாட்டிய நிகழ்ச்சி, வள்ளித்திருமணம் நாடகம், கிராமியப் பாடல் உள்ளிட்ட கிராமிய கலைவிழா சிறப்பாக நடைபெற்றது.

இன்று நடைபெற்ற தொடக்க விழா நிகழ்ச்சியில் கலை முதுமணி விருதுகள் ஜோதிவேல் தெருக்கூத்து கலைப் பிரிவும், கிருஷ்ணன் நாடகம் பிரிவும், விக்டர் குழந்தை ராஜ் சிலம்பம் பிரிவும், கிரிராஜ் தஞ்சை ஓவியம் பிரிவும், ரெங்கநாதன் நாடகம் பிரிவும், மோகனசுந்தரம் நாதஸ்வரம் பிரிவுக்கும் மேலும், கலை நன்மணி விருதுகள் ராஜேந்திரன் தவில் பிரிவும், தங்கவேலு நாடகம் பிரிவும், அஞ்சலை தேவி நாடகம் பிரிவும், ஆர்ம்ஸ்ட்ராங் ராபி நாடகம் பிரிவும், கமலா ஓவியம் பிரிவும்.இராதாகிருஷ்ணன் மிருதங்கம் பிரிவுக்கும் தொடர்ந்து கலைச் சுடர்மணி விருதுகள் ராஜேஸ்வரி ஸ்ரீதர் – பரதநாட்டியம் பிரிவும், ராஜசேகர் – – சிலம்பம் பிரிவும், ராஜகோபாலன் நாடகம் பிரிவும், விஜி – நாடகம் பிரிவும், அன்பரசன் – கரகாட்டம் பிரிவும், சண்முகம் சாமியாட்டம் பிரிவுக்கும், கலை வளர்மணி விருதுகள் பிரித்தி பிரகாஷ் காளியாட்டம் – பிரிவும், தீபதர்ஷினி பரதநாட்டியம் பிரிவும், கோதாஸ்ரீ பரதநாட்டியம் பிரிவும், பவித்ரா -வாய்ப்பாட்டு பிரிவும், ராஜசேகர் -தவில் பிரிவும், கஜலட்சுமி – பரதநாட்டியம் பிரிவுக்கும், கலை இளமணி விருதுகள் ஹேமாஸ்ரீ பரதநாட்டியம் பிரிவும், ஜூஃபி.சினேகவளன் – – ஓவியம் பிரிவும், நித்திலா பரதநாட்டியம் பிரிவும், ரிபாயா சிலம்பம் பிரிவும், – அக்ஷிதா ஓவியம் பிரிவும், கீர்த்திஸ்வரன் குரலிசை பிரிவுக்கும் என 30 கலைஞர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் விருதுகளை வழங்கி பாராட்டினார்.

மேலும், இளையோருக்கான மாவட்டக் கலை போட்டியில் குரலிசை பிரிவில் ஆதர்ஷினி முதல் பரிசும், சங்கீத பிரியா இரண்டாம் பரிசும், சாத்விகா மூன்றாம் பரிசும், பரதநாட்டியம் பிரிவில் இதிகாசினி முதல் பரிசும், கருவியிசை பிரிவில் பார்த்தசாரதி முதல் பரிசும், ராஜசேகர் இரண்டாம் பரிசும், ஜெய்கணேஷ் மூன்றாம் பரிசும், கிராமிய நடனம் பிரிவில் விக்னேஷ் கார்த்திக் முதல் பரிசும், சங்கரி இரண்டாம் பரிசும், ஜாஸ்மின் ஹைதர் அலி மூன்றாம் பரிசும், ஓவியம் பிரிவில் சீனிவாசன் முதல் பரிசும், கலைவாணி இரண்டாம் பரிசும், திலீப்குமார் மூன்றாம் பரிசும் என 15 கலைஞர்களுக்கு மாவட்ட கலை மன்றத்தின் விருதுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கி பாராட்டினார். இந்நிகழ்வில், திருச்சி வருவாய் கோட்டாட்சியர் அருள், திருச்சி மண்டலக் கலை பண்பாட்டு துறை துணை இயக்குநர் ஹேமநாதன், மைய உதவி இயக்குநர்(கூ.பொ) செந்தில்குமார், திருச்சி மேற்கு வட்டாட்சியர் பிரகாஷ், கலை பண்பாட்டுத்துறை அலுவலர்கள் மற்றும் கலைஞகர்கள், அரசு இசைக்கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்