காக்ரோச் கிரியேஷன்ஸ் நிறுவனம்சார்பில் வளரும் கலைஞர்களின் பங்களிப்போடு கொரோனா கால பாதிப்பை மையப்படுத்தி நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கையை குறும் படமாக தயாரித்துள்ளது. குறிப்பாக உலகையே அச்சுறுத்தும் கொரோனா பாதிப்பால், தொழில்கள் நொடித்து, பல குடும்ங்கள் தவித்து வருகின்றன அது போன்ற நிலையில் வங்கிக் கடனை திருப்பிச் செலுத்த முடியாததால், விபரீத முடிவு எடுக்கும் நடுத்தர குடும்பத்தின் கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது. எந்த ஒரு பிரச்சனைகளுக்கும் தற்கொலை என்பது தீர்வாகது பிரச்சனைகளை தைரியமாக சட்டப்படி எதிர் கொள்ள வழி உண்டு என்பதை உணர்த்தும் குறும்படம். இதில், நடிகர்கள் ஆண்டனி தாமஸ்,ஆனந்தி,ஹன்சிகா, பார்த்திபன்,ராம் சுரேஷ், ஹெப்சி, பாண்டி, தினேஷ், மணிவேல், வேத் ஆகியோர் காதாபாத்திரங்களாக நடித்துள்ளனர்.
தேசிய மனித உரிமை ஆணையத்தின் குறும்பட போட்டியில் தேர்வு செய்யப்பட்ட, ‘காகிதப் பூக்கள் ” என்ற இப் படத்தை மே 9 அன்னையர் தினத்தில் திருச்சியில் இப்படத்தை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட தலைவர் ஸ்ரீதர் முன்னிலையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு வெளியிட்டார். மேலும் குளித்தலை கலையாலயா கலை மற்றும் கலாச்சார அகடமியின் இயக்குனர் முனைவர் Dr.இரா.வை. மரகதம் (பேராசிரியர்) அவர்கள் முதல் சிடியை பெற்றுக் கொண்டார்.