தேசத் தந்தை மகாத்மா காந்தி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டும் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டும் திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மணப்பாறை நகரில் அமைந்துள்ள மகாத்மா காந்தி மற்றும் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் உருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் திருச்சி மாநகராட்சி காங்கிரஸ் கட்சி தலைவர் வழக்கறிஞர் கோவிந்தராஜன் தலைமை தாங்கினார் .மேலும் இந்நிகழ்ச்சிக்கு மணப்பாறை நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் முருகேசன் மாவட்ட பொருளாளர் கணபதி மாநில செயலாளர் ரமேஷ் குமார் முன்னிலை வகித்தனர் மேலும் மணப்பாறை தியாகேசர் ஆலைப் பகுதியில் 1955 ஆம் ஆண்டு வைக்கப்பட்ட மகாத்மா காந்தி சிலையை மீண்டும் நகர காங்கிரஸ் கமிட்டியால் புனரமைக்கப்பட்டு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் கோவிந்தராஜன் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சிகளில் பொது மக்களுக்கு இனிப்பு மற்றும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் வட்டார தலைவர்கள் மணப்பாறை சத்தியசீலன் சிவ சண்முகம் வையம்பட்டி செல்வம் ராதாகிருஷ்ணன் திருவெறும்பூர் செந்தில்குமார் முன்னாள் நகர மன்ற உறுப்பினர் மிலிட்டரி முருகன் மருங்காபுரி தினேஷ் மாவட்ட நிர்வாகிகள் வையம்பட்டி கோபாலகிருஷ்ணன் குமார் எழிலரசன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பிச்சை மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள்மல்லிகா செல்வி மேரி ராஜம் இளைஞர் காங்கிரஸ் ராம்பிரசாத் சிறுபான்மை பிரிவு தலைவர் நஜீம் நகர நிர்வாகிகள் டைலர் பாலன் ராதாகிருஷ்ணன் பாண்டி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.