காங்கிரஸ் பேரியக்கத்தின் 141 வது ஆண்டு துவக்க நாள் விழாவை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் முப்பெரும் விழா திருச்சி அருணாச்சலம் மன்றத்தில் இன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரெக்ஸ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தமிழக காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் செல்வப் பெருந்தகை கலந்து கொண்டார்.

முப்பெரு விழாவின் முதல் நிகழ்வாக மெயின் கார்ட்கேட் எதிரே உள்ள மகாத்மா காந்தியின் திருவுருவ சிலை மற்றும் அருணாச்சலம் மன்ற வளாகத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை காங்கிரஸ் கொடியை ஏற்றி வைத்து காங்கிரஸ் கமிட்டியின் மூத்த நிர்வாகிகள் 141 பேருக்கு சால்வை அணிவித்து பெருந்தலைவர் காமராஜர் விருது வழங்கி கௌரவித்தார். இந்நிகழ்வில் வடக்கு மாவட்ட தலைவர் கலை, முன்னாள் மாவட்ட தலைவர்கள் தொட்டியம் சரவணன், ஜெரோம் ஆரோக்கியராஜ், நிர்வாகிகள் சரவணன், பஜார் மொய்தீன், சீலாலெலஸ், பிரியங்கா பட்டேல், கோட்டத் தலைவர்கள் மண்டல தலைவர்கள் காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
