தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றின் அதிகரிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது தற்போது திருச்சி மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்காக மாநகராட்சி சார்பில் காந்தி மார்க்கெட் பகுதியில் இயங்கி வந்த அனைத்து மொத்தம் மற்றும் சில்லறை வியாபாரம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
மாநகராட்சி வழிகாட்டுதலின்படி திருச்சி மரக்கடை பழைய பாஸ்போர்ட் அருகிலிருந்து மேலபுலிவார் ரோடு பகுதியில் உள்ள காமராஜர் வளைவு வரை உள்ள பகுதியில் வருகிற திங்கட்கிழமை காலை முதல் மொத்த வியாபாரம் மற்றும் சில்லறை வியாபாரக் கடைகள் இப்பகுதியில் இயங்கும் என மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.