கர்ம வீரர் காமராஜர் அவர்களின் 122 வது பிறந்த தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டம் துவாக்குடி மண்டல் பாரதிய ஜனதா கட்சி சார்பாக BHEL பகுதியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி கொண்டாடபட்டது. இந்நிகழ்விற்கு பாஜக துவாக்குடி நகர தலைவர் விஜய் ஆனந்த் சிறப்பு அழைப்பாளராக கலிந்து கொண்டு காமராஜரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அருகில் மாநில OBC அணி பாஜக துணை தலைவர் சரவணன் முன்னால் பட்டியல் அணி மாநில செயலாளர் இந்திரன் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ராஜராஜன் பாண்டியன் ஆகியோர்கள் சிறப்பு அழைப்பாளாகளாக கலந்து கொண்டனர். இந்த நிகழ்வுக்கு துவாக்குடி நகர பாஜக நிர்வாகிகள் குபேந்திரன் ஹரிதாஸ் ஸ்ரீகுமார் கமலாம்பாள் கலைசெல்வன் எழில்நகர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு மாலை அணிவித்தனர்.