திருச்சி மாவட்டம் துறையூர் ஆலமரம் பேருந்து நிறுத்தம் அருகில் சாமிநாதன் காய்கறி அங்காடி அமைந்துள்ளது. இந்த இடத்தை துறையூர் நகராட்சி நிர்வாகம் பராமரித்து வருகிறது. மேலும் சுமார் 46ஆண்டு காலமாக 150 குடும்பங்கள் வியாபாரம் செய்து தனது ஜீவனத்தை நடத்தி வருகிறது. இந்நிலையில் துறையூர் நகராட்சி நிர்வாகம் காய்கறி கடைகளை இடமாற்றம் செய்வதாக அறிவித்ததைத் தொடர்ந்து சுமார் 150 வியாபாரிகள் நேற்று மாலை சாமிநாதன் காய்கறி மார்க்கெட்டில் சங்கத் தலைவர் அண்ணாதுரை தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினர். இந்த கூட்டத்தில் சந்தையை இடமாற்றம் செய்யக் கூடாது என்றும், சந்தை இடமாற்றம் செய்தால் பொதுமக்கள் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் வரவேண்டும் என்றும், இதனால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும், எனவே சாமிநாதன் மார்க்கெட்டில் அருகில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான இடத்தை விரிவுபடுத்தி இதை இரண்டடுக்கு மாடி கட்டிடம்மாக கட்டித்தர வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. இந்த கூட்டத்திற்க்கு சாமிநாதன் தினசரி காய்கறி சந்தை செயலாளர் ராஜா, பொருளாளர் ராதாகிருஷ்ணன் உள்பட ஏராளமான வியாபாரிகள் கலந்து கொண்டு ஒருமனதாக தீர்மானத்தை நிறைவேற்றினர்.