திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி திருக்கோயில் கார்த்திகை தீபத் திருநாளையொட்டி சிறப்பு பூஜைகள் செய்து, மேளதாளங்கள் முழங்க, வாண வேடிக்கையுடன் தாயுமானவர் சன்னதி அருகே இருந்து எடுத்து வரப்பட்ட தீபம் மலைக்கோட்டையின் நடுப்பகுதியில் உள்ள தாயுமானசுவாமி கோவிலில் இருந்து உச்சிப்பிள்ளையார் சன்னதிக்கு முன்பாக உள்ள உயரமான கோபுரத்தில் அமைக்கப்பட்ட பிரமாண்ட செப்புக் கொப்பரையில் பருத்தி துணியில் தயாரிக்கப்பட்ட 300 மீட்டரில் திரி வைக்கப்பட்டு,
சிறப்பு அலங்காரத்தில் தாயுமானவர் சுவாமி உடனுறை மட்டுவார் குழலம்மை எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
அதில் எண்ணெய் மற்றும் நெய் ஆகியவற்றை ஊற்றி தயார் நிலையில் இருந்த பிரம்மாண்ட செப்புக் கொப்பரையில் இன்று மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது. இந்த தீபம் தொடர்ந்து 3 நாட்கள் அணையாமல் எரியக்கூடியதாகும்.
இந்த தீபத்திருநாளில் உள்ளூர் மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் அதிகளவில் வந்து சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் மலைக்கோட்டை உச்சியில் எரியும் இந்த மகா தீபத்தை திருச்சி மாநகரை சுற்றியுள்ள சுமார் 5 கிலோமீட்டர் தொலைவு வரை உள்ள பொதுமக்கள் பார்க்க முடியும். இந்த மகா தீப திற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் விஜயராணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.