திருச்சி ரயில்வே ஜங்ஷன் எதிரே விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் நாளை முதல் காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இந்நிலையில் போராட்டம் நடைபெற உள்ள இடத்தை தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு மற்றும் நிர்வாகிகள் நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அய்யாகண்ணு பேசியது.. 

விவசாயிகளின் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் போராட்டங்கள் நடத்தினால் மட்டுமே மத்திய ,மாநில அரசு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள் என்ற நிலை தற்போது எழுந்துள்ளது. காவேரியிலிருந்து மாதம், மாதம் தண்ணீர் திறக்க வேண்டுமென உச்சநீதிமன்றமும், காவேரி மேலாண்மை ஆணையமும் தெரிவித்த பிறகும் கர்நாடக அரசு தண்ணீரை திறந்து விட முடியாது என்கிறார்கள். மேகதாதுவில் அணை கட்டினால் தற்போது தமிழ்நாட்டில் செய்யக்கூடிய விவசாயம் நிலங்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விடும். இத்தகைய சூழ்நிலை ஏற்படக் கூடாது, என்பதற்காகத்தான் விவசாயிகள் ஒன்றிணைந்து டெல்லி புறப்பட்டு நாடாளுமன்ற முன்பு போராட்டம் நடத்த திட்டமிட்டோம்.

ஆனால் நாங்கள் டெல்லி செல்லும் முன்பாகவே எங்களை தடுத்து நிறுத்தி விட்டார்கள்.ஆகையால் திருச்சி ஜங்ஷன் பகுதியில் காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். விவசாயிகளின் விளைச்சலுக்கு உரிய விலையை நிர்ணயம் , விவசாய கடனை தள்ளுபடி , மேலும் குத்தகை விவசாயிகளுக்கு அரசு மானியத்தில் வங்கி கடன் வழங்க வேண்டும். குத்தகை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காத்திடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காலம் வரையற்ற காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என்றார். எங்களுடைய கோரிக்கையை மத்திய, மாநில அரசு நிறைவேற்றும் வரை, எங்கள் காத்திருப்பு போராட்டம் தொடரும் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்