தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 63,000 காலி பணியிடங்கள் உள்ளது, இதில் 24ஆயிரம் களஉதவியாளர்கள் காலிப்பணியிடங்கள் உள்ளநிலையில் மின்வாரிய துறையில் அனைத்து பணிகளையும் மேற்கொண்டுவரும் கேங்மேன் பணியாளர்களை உடனடியாக கள உதவியாளராக பணியமர்த்திட வேண்டும், குடும்பத்தைப் பிரிந்து 400, 500 கிமீ தூரத்தில் பணியமர்த்தப்பட்டு கடுமையான பணிச்சுமையிலும், மன அழுத்தத்திலும் பணியாற்றிவரும் கேங்மேன் பணியாளர்களை சொந்தஊருக்கு இடமாற்றம் செய்திட வேண்டும், உடற்தகுதிதேர்வு மற்றும் எழுத்துதேர்வில் தேர்ச்சிபெற்று, மின்சாரவாரிய நிர்வாகக்குழு அனுமதிவழங்கியும் பணியமர்த்தப்படாமல் நிலுவையில் உள்ள 5493 கேங்க்மேன்களுக்கு உடனடியாக பணிஆணை வழங்கிடவேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து, இன்றையதினம் தமிழ்நாடு மின்சாரவாரிய கேங்மேன் தொழிற்சங்கம் சார்பில், மாநிலம் தழுவிய அளவில் மின்வாரிய தலைமைப் பொறியாளர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுவருகிறது.

அந்த வகையில் திருச்சி மன்னார்புரம் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு இன்று மாலை தமிழ்நாடு மின்சார வாரிய கேங்மேன் தொழிற்சங்கத்தின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மின்வாரியத்தில் பணியாற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட கேங்மேன் தொழிலாளர்கள் கலந்துகொண்டு கேங்மேன் தொழிலாளர்களை வஞ்சிக்கும் தமிழக அரசைக் கண்டித்தும், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 24ம்தேதியன்று தமிழக அரசு மற்றும் மின்வாரியத்துறைக்கு எதிராக ஆர்பாட்டம் நடத்தியநிலையில், அரசின் பணிச்சுமையால் 2பேர் உயிரிழந்ததுடன், பணியின்போது உயிரிழந்த 2கேங்மேன்கள் குடும்பத்தினருக்கு எந்தஒரு உதவித்தொகையும் அரசால் வழங்கப்படவில்லையென்றும், அதிகபணிச்சுமையைக் கொடுத்து தங்களை அடக்குமுறையைக் கையாள்வதாகவும் வேதனையுடன் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்