திருச்சி உறையூரை அடுத்து உள்ள குழுமணி சாலையில் உள்ள ஸ்டேட் பேங்க் காலனி பகுதியில் உள்ள உய்ய கொண்டான் கால்வாயில் அருகில் பிரியும் பாண்டமங்கலம் பிரிவு வாய்க்கால் பகுதியில் மகாலிங்கம் என்பவர் கால்வாயை ஆக்கிரமித்து கட்டுமான பணிகளை செய்து வருகிறார் இதனால் பருவமழை காலங்களில் தண்ணீர் அதிக அளவில் அப்பகுதி முழுவதும் நிரம்புவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது தொடர்ந்து எங்கள் பகுதி மக்கள் கோரிக்கை வைத்தும் அவர் தொடர்ந்து கட்டுமான பணிகளை செய்து வருகிறார்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் பொதுப்பணி துறையில் கேட்டபோது மகாலிங்கம் விவசாயி என அனுமதி பெற்று பாலம் கட்ட ஏற்பாடு செய்ததாக கூறினார். ஆனால் மகாலிங்கம் கட்டுமான பணிகளை தொடங்கி நடுவாய்க்காலில் இரண்டு கான்கிரீட் பிலர்களை அமைத்துவிட்டு திரும்பி சென்று விட்டார் இது குறித்து பொதுப்பணித்துறை அலுவலகத்தில் சென்று விசாரித்த போது மகாலிங்கம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் தான் விவசாயம் செய்ய போவதாகவும் அதற்காக இடுபொருட்களை கொண்டு செல்லப்பாலம் தேவை எனக் கூறி அனுமதி பெற்றதாக கூறப்படுகிறது. மேலும் மகாலிங்கம் விவசாயம் செய்வதாக கூறிக்கொண்டு வாய்க்கால் அருகில் உள்ள ஆற்று மணலை அள்ளி வருவதாக பகுதி மக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்தப் பணிகள் முழுமையாக முடிந்தால் பருவமழை காலங்களில் மழை நீர் தேங்கி வெள்ளை நீராக சூழப்பட்டு அதனால் பல்வேறு தொற்று நோய்கள் வருவதற்கான அபாயம் ஏற்படும் என அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர். மேலும் உயர் கொண்டான் கால்வாயில் இருந்து பிரியும் பாண்டமங்கலம் பிரிவு வாய்க்கால் மற்றும் மாநகராட்சி பூங்கா ஆகியவற்றை ஆக்கிரமித்து சட்ட விரோதமாக விவசாயம் செய்யப்போவதாக கூறி விதிகளுக்கு புறம்பாக பாலம் கட்டி எங்கள் பகுதி மக்கள் வீடு அமைந்துள்ள ஸ்டேட் பேங்க் காலனி மற்றும் அருகிலுள்ள சாய் ஸ்டேட் பகுதிகளில் வெள்ள அபாயம் மற்றும் பல வகையான இடையூறுகள் ஏற்படுத்த முயலும் தனிநபரான மகாலிங்கம் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் குறிப்பாக சட்ட விரோதமாக அவர் கட்டி வரும் பால கட்டுமான பணியை தடுத்து நிறுத்த வேண்டுமென இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் இடம் மனு அளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்