ஆடி பெருக்கையொட்டி திருச்சி காவிரி ஆற்றில் பொதுமக்கள் வழிபாடு நடந்த தடை விதிக்கப்பட்டதால், அம்மா மண்டபம் உள்ளிட்ட முக்கிய படித்துறைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
ஆடிப் பெருக்கு விழாவின்போது திருச்சி மாவட்ட காவிரி ஆற்றில் பொதுமக்கள் நீராடி, பூஜை செய்வது வழக்கம். அதேபோல், புதிதாக திருமணம் செய்த ஜோடிகள் காவிரி படித்துறையில் தாலி கயிற்றினை மாற்றுவது வழக்கம். இதனையொட்டி ஶ்ரீரங்கம் அம்மா மண்டம் காவிரி படித்துறை உள்ளிட்ட முக்கிய படித்துறைகளில் மக்கள் வெள்ளம் அதிக அளவில் காணப்படுகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலை பவரல் எச்சரிக்கை காரணமாக 02-08-2021 மற்றும் 03-08-2021 ஆகிய ஆடி கிருத்திகை மற்றும் ஆடிப் பெருக்கையொட்டி மக்கள் கூடுவதை தவிர்க்க முக்கிய கோவில்களில் பொதுமக்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டது.
மேலும் ஸ்ரீரங்கம் அம்மா மண்டப படித்துறை, கருட மண்டப படித்துறை, ஓயாமாரி படித்துறை, அய்யாளம்மன் படித்துறை ஆகிய பகுதிகளில் ஆடிப்பெருக்கை தொட்டி பொதுமக்கள் பூஜை செய்ய தடை விதிக்கப்பட்டது இந்நிலையில் காவிரிக் கரையோரங்களில் புதுமண தம்பதிகள் பெண்கள் பூஜை செய்து தாலி பிரித்து கட்டிக்கொண்டனர்.