விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திருச்சி மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அருள் தலைமையில் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திருச்சி மாவட்டத்தில் இருந்து பல்வேறு சங்கங்களை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்று தங்களின் கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர். அந்த வகையில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர். அதனைத் தொடர்ந்து விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: –
திருச்சி உறையூர் பகுதியில் பழமையான காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது இந்த கோவிலில் பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெற்று வருவதாக கடந்த கூட்டத்தில் மனு அளித்திருந்தோம் அந்த மனுவை ஏற்று தற்போது கோவில் சுத்தமாக இருப்பதற்கு கோட்டாட்சியர் அருளுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தோம் மேலும் வருகிற மே 8, 9 ஆகிய தினங்களில் திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதல்வர் மு க ஸ்டாலின் திருச்சிக்கு வருகை தர உள்ளார் அவரை தேசிய தென்னிந்திய நதிகள் விவசாயிகள் சங்கத்தினர் 200க்கும் மேற்பட்டோர் சந்தித்து காவேரி அய்யாறு இணைப்பு திட்டம் குறித்தும், லாபகரமான விலையாக மத்திய அரசிடம் கரும்புக்கு ரூ.8000 கேட்டுள்ளோம் அதற்கு 3555 தருவதாக அறிவித்துள்ளது தமிழக விவசாயிகளை நீங்களாவது காப்பாற்றுங்கள் என முதல்வரிடம் கோரிக்கை வைக்க உள்ளோம் என தெரிவித்தார்.