திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் தலைமையில் இன்று நடைபெற்றது இந்த கூட்டத்தில் பாஜக விவசாய அணி சார்பாக சுப்பிரமணியன் தலைமையில் விவசாயிகளின் கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் அளிக்கப்பட்டது அந்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாது :-
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை 100 நாள் வேலை திட்டத்தை விவசாயத்திற்கு பயன்படுத்தினால் விவசாயிகளின் ஆள் பற்றாக்குறை நீங்கும் எனவே100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் பணிபுரியவர்ளை பயன்படுத்த வேண்டும் மற்றும் தனியார் பேருந்து மற்றும் அரசு போக்குவரத்து பேருந்துகள் அனைத்தும் ஆலம்பட்டி புதூர் வண்ணாங்கோவில் பேருந்து நிறுத்தத்தில் ஸ்டாப்பில் நிறுத்த வேண்டும் மற்றும் வையம்பட்டி ஒன்றியம் தேக்குமலை கோவில் அடிவாரம் கிராவல் மண் திருடப்படுவதை தடுக்கும் விதமாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் மாயனூரில் இருந்து பொன்னணி ஆறு அணைக்கு நீர்வரத்து ஆய்வு செய்ய வேண்டும் எனபது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர்.