கிறிஸ்துமஸ் தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது இயேசு கிறிஸ்து பிறப்பை உணர்த்தும் வகையில் கொண்டாடப்படும் இந்த திருவிழா நாடு முழுவதும் தேவாலயங்கள் வண்ண விளக்குகளால் களைக்கட்ட தொடங்கியுள்ளது. கிறிஸ்துவ மக்கள் ஒரு மாதமாக கடுமையாக விரதம் மேற்கொண்டு கிறிஸ்துமஸ் விழாவை வரவேற்க தொடங்கி காத்திருந்த நிலையில் கிறிஸ்துமஸ் விழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினத்தை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடுகிறார்கள்

உலகில் பிறந்து தங்களுக்காக சிலுவையில் தனது இன் உயிரை தியாகம் செய்த இயேசுவின் பிறப்பை கொண்டாடும் வகையில் ஒவ்வொரு டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படுகிறது – உலகின் பல்வேறு பகுதிகளில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் மாதம் பிறந்ததிலிருந்தே பல்வேறு கிறிஸ்தவ நகரங்கள் விழாக் கோலம் பூண்டுள்ளது. இந்த நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திருச்சியில் உள்ள பல்வேறு முக்கிய தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி மற்றும் கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது.. உலக மீட்பர் பசிலிக்கா ஆரோக்கிய மாதா ஆலயம் ,லூர்து அன்னை ஆலயம், பாலக்கரை பகுதியில் உள்ள பழைய கோவில் தேவாலயம் ஆகிய பழமை வாய்ந்த தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது

இதில் சிறுவர்கள், இளைஞர்கள் வயதானவர்கள் என்று குடும்பமாக வருகை தந்து சிறப்பு திருப்பலியில் கலந்து கொண்டனர். இயேசு கிறிஸ்துவின் பிறப்பின் உன்னதத்தை கொண்டாடும் அதே வேளையில் பிறருக்கு உதவுவது மனித நேயத்துடன் சகோதரத்துவத்துடன் நடந்து கொள்வது எப்போதும் ஒருவருக்கு ஒருவர் அன்பை பரிமாறி மகிழ்வாக இருப்பது தமிழகத்தின் தலைநகர் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்கள் தென் தமிழகத்தில் வரலாறு காணாத அளவில் மழை பெய்து வெள்ளம் ஏற்பட்டு மக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர். போன்ற பல்வேறு விஷயங்களை இந்த கூட்டு பிரார்த்தனையின் போது அறிவுறுத்தல் செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *