டிசம்பர் 25 ஆம் தேதி இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளை கிறிஸ்துமஸ் தின விழாவாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து சபைகளும் ஒன்றிணைந்து பொதுமக்களுக்கு இயேசு கிறிஸ்துவின் அன்பை வெளிப்படுத்தும் விதமாக கிறிஸ்மஸ் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் கிறிஸ்தவர்கள் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் ஆடி பாடி கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்தும்,

தலையில் கிறிஸ்மஸ் தாத்தா தொப்பி அணிந்து திருச்சி ஜான் வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் இருந்து பேரணியாக புறப்பட்டு சென்றனர். முன்னதாக திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் கிறிஸ்துமஸ் பேரணியை தொடங்கி வைத்து கிறிஸ்தவ மக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த பேரணியானது திருச்சி மத்திய பேருந்து நிலையம், ரொனால்டோ ரோடு, பாரதியார் சாலை கண்டோன்மெண்ட் , நீதிமன்றம் வழியாக மீண்டும் வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தை வந்து அடைந்தனர்.

பேரணியின்போது கிறிஸ்துவர்கள் ஏசு ராஜா முன்னே செல்கிறார், ஓசான கீதம் பாடுவோம், தேவனுக்கே மகிமை தெய்வத்திற்கே மகிமை உள்ளிட்ட பாடல்களை பாடி ஆடி மகிழ்ந்து சென்றனர். இப்பேரணியில் ரெவென்ட் பிரசாத் தேவசித்தம், பேராயர்கள் சவரிராஜ், போதகர்கள் பவுல், ஜான் பீட்டர், மார்ட்டின், குமார், ரெவரெண்ட் மணப்பாறை ரெவரெட் விஜய் சகயராஜ், ரெபரென்ட் ஜெர்ரிடேனியல், சுவிசேஷகர் பொன்.பிரிட்டோ, மற்றும் பேராயர்கள், போதகர்கள் விசுவாசிகள் திரளாக பங்கேற்றனர்.
