தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் திருச்சி மற்றும் டெல்டா மாவட்டங்களில் இரண்டு நாட்கள் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில் திருச்சி மாநகராட்சி அலுவலகத்திற்கு திடீரென வந்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மேயர் அறையில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
அப்போது அங்கு மனு அளிக்க வந்த SAFE Trust MD திருநங்கை காஜல் தமிழக திருநங்கை மேம்பாடு குறித்து மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் 2020-ல் திருநங்கை வாரியத்தின் படி நான் வாரிய உறுப்பினராக இருந்தபொழுது மொத்தம் 15000 திருநங்கைகள் என கனக்கெடுக்கப்பட்டது. அதன் படி அரசு மூலம் மாவட்டம் தோறும் திருநங்கைகளுக்கு தொழிற் சாலைகள் அமைத்து தர கோரியும், 15000-க்கும் மேற்பட்ட திருநங்கைகளுக்கு தகுதியின் அடிபடையில் அரசு வேலை வழங்க கோரியும், குடும்பத்திலிருந்து விரட்டியடிக்கப்படும் திருநங்கைகளுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்துக்கொள்ள குடும்ப சொத்தில் திருநங்கைகளுக்கு சம உரிமை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை மனுவாக எழுதி தமிழக முதல்வர் மு க ஸ்டாலினிடம் திருநங்கை கஜோல் வழங்கினார்.