திருச்சி மாவட்டம் பாலாடையில் ரயில் தண்டவாளத்தில் டயர் வைக்கப்பட்டது தொடர்பாக இன்று திருச்சி மண்டல ரயில்வே எஸ்.பி செந்தில் குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்;-

திருச்சி ரயில்வே காவல் மாவட்டம், லால்குடி மேளவாளாடியில் ரயில் தண்டவாளத்தில் 2டயர்களை வைத்ததால் நாகர்கோவில் சென்னை எஸ்பிரஸ் சில நிமிடங்கள் நின்று சென்றது. இதனைத் தொடர்ந்து திருச்சி ரயில்வே டி.எஸ்.பி பிரபாகரன் தலைமையில் 3தனிப்படை விசாரணை மேற்கொண்டு வந்தனர். சுமார் 30 க்கு மேற்பட்டோரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் திருச்சி மாவட்டம், மேலவாளாடியை சேர்ந்த வெங்கடேசன், பிரபாகரன், கார்த்திக் மூன்று பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.

அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் சுரங்க பாலம் சரியான இடத்தில் கட்டவில்லை, முறையாக சாலை வசதி இல்லை என்று அரசின் கவனத்தை ஈர்க்க இவ்வாறு செய்துள்ளனர் என தெரிவித்துள்ளனர். இவர்கள் மீது ரயில் கவிழ்ப்பு அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்படும். ரயிலை கவிழ்க்க திட்டம் என்கிற அடிப்படையில் இவர்கள் மூன்று பேர் மீதும் கடுமையான தண்டனை, நடவடிக்கை இருக்கும் என தெரிவித்தார்.

மேலும், ரயில் போக்குவரத்து என்பது வெகுஜன மக்கள் அதிகம் பயன்படுத்த கூடியது எனவே மக்கள் கெட்ட என்னத்துடன் செயல்பட்டால் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை, திருச்சியில் கஞ்சா தடுப்பு வேட்டையில் ஜனவரி1ம் தேதி முதல் 764 கிலோ கஞ்சா பிடித்துள்ளோம். கஞ்சா வழக்கு தொடர்பாக இதுவரை 116 நபர்கள் வரை கைது செய்துள்ளோம் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *