தமிழகத்தில் உள்ள 16 மாநகராட்சிகள் எல்லை விரிவாக்கம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, திருச்சி மாநகராட்சியின் எல்லைக்கு அருகே உள்ள 22 ஊராட்சிகள் மாநகராட்சியுடன் இணைக்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதனால், பல்வேறு கிராம மக்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். திருச்சி மாநகராட்சிக்கு அருகில் உள்ள 22 கிராம ஊராட்சிகளை திருச்சிராப்பள்ளி மாநகராட்சியுடன் இணைப்பதற்கான அறிவிப்பை சமீபத்தில் தமிழக அரசு வெளியிட்டது. அன்று முதல் கிராம மக்கள் தங்களது கிராமத்தை மாநகராட்சி உடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு அரசுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே, திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி அந்தநல்லூர் ஒன்றியம் உட்பட்ட குமாரவயலூர் ஊராட்சியை திருச்சி மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொருளாதாரத்தில் பின் தங்கிய, விவசாயத்தை மையமாகக் கொண்டு வாழை மற்றும் நெல் பயிரிடப்பட்டு வரும் இந்த ஊராட்சிகளை மாநகராட்சி உடன் இனைத்தால் வேலை வாய்ப்பு பாதிக்கப்படுவதுடன்,கிராம மக்களின் பொருளாதாரம் பின்னுக்குத் தள்ளப்படும் நிலை உருவாகும். எனவே விவசாயத்தை மையமாக வைத்து செயல்படும் ஊராட்சிகளை இணைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். அவ்வாறு மீறி இணைக்கும் பட்சத்தில் திருச்சிக்கு வருகிற 28 ஆம் தேதி சராணர் இயக்கத்தின் மாநாட்டில் கலந்து கொள்ள வருகை தர உள்ள இந்திய குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களை ஒன்றிணைத்து முற்றுகை போராட்டம் நடத்துவோம் என்றும் அரசுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்