திருச்சியில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு சென்னை கே.கே நகரில் திருநங்கைகளிடம் போலீசார் தகராறில் ஈடுபட்டதாக கூறி மூன்று காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதுபோன்று நடைபெறாமல் இருக்க திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் உத்தரவின்படி திருச்சி கன்டோன்மென்ட் காவல் உதவி ஆணையர் அஜய் தங்கம் தலைமையில் திருநங்கைகளுக்கான விழிப்புணர்வு கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பேசிய திருச்சி கன்டோன்மென்ட் காவல் நிலைய உதவி ஆணையர் அஜய் தங்கம்: –
கடந்த சில நாட்களாக திருநங்கைகள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இரவு நேரங்களில் பாலியல் தொழிலில் ஈடுபடும் திருநங்கைகள் சத்திரம் பேருந்து நிலையம் , ஜங்ஷன் , டோல்கேட், பால்பண்ணை உள்ளிட்ட இடங்களில் அவ்வழியே செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை மறைத்து பணம் வாகனங்களை திருடி செல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆண்களாக இருந்தாலும் பெண்களாக இருந்தாலு ம் திருநங்கைகளாக இருந்தாலும் குற்றம் செய்தால் சட்டத்துக்கு முன் அனைவரும் சமம்தான். குற்றச்சம்பவங்களை கட்டுப்படுத்த மாநகர காவல் துறை பல்வேறு முயற்சிகளை மேற்க்கொண்டு வருகிறது.
அதற்கு திருநங்கைகள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். பாலியல் தொழிலில் ஈடுபடும் திருநங்கைகள் அதற்கு மாற்றாக உங்களுக்கு அவரவர் கல்வித் தகுதிக்கு ஏற்றவாறு வேலை ஏற்படுத்தித் தருகிறோம். தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் அனைத்து உதவிகளும் உங்களுக்கு கிடைக்க வழிவகை செய்யப்படும். எனவே நீங்கள் அனைவரும் காவல்துறைக்கு ஒத்துழைக்க வேண்டும் இதையும் மீறி குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்..