திருச்சி காந்தி கீழப்புலிவார்டு முருகன் திரையரங்கம் அருகிலுள்ள அரசினர் கூர்நோக்கு இல்லத்தை மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் மற்றும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் ஜி.ஆனந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் ஆனந்த் கூறுகையில்:-

தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் என்பது குழந்தைகளின் உரிமையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக செயல்பட்டு வருகிறது. தற்போது நான் 2வது முறையாக பதவியேற்று உள்ளேன். கடந்த முறை இந்தியா முழுவதும் உள்ள உள்ள 234 மாவட்டங்களில் இயங்கி வரும் கூர்நோக்கு இல்லத்தை நேரில் சென்று ஆய்வு செய்தேன். கடந்த கொரோனா காலகட்டத்தில் ஊரடங்கு நேரத்தில் 38 மாவட்டங்களில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டோம். தற்போது மார்ச் 7ம் தேதி பதவி ஏற்று கொண்டேன். தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் இயங்கி வரும் அன்பு ஜோதி ஆசிரமத்தில் ஆய்வை மேற்கொண்டேன். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு, தெலுங்கானா புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் உள்ள கூர்நோக்கு இல்லங்களை தேர்ந்தெடுத்து அங்கு கிடைக்கும் புகார்களின் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்.

குறிப்பாக கூர்நோக்கு இல்லங்களில் போதை பொருள்கள் பயன்படுத்தப்படுவதாகவும், ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவதாகவும் பல்வேறு தவறான செயல்களில் குற்றங்கள் நடைபெறுவதாக தகவல்கள் கிடைக்கும் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். இந்தியா முழுவதும் 21கூர் நோக்கு இல்லங்களை தேர்வு செய்து அங்கு ஆய்வை மேற்கொண்டு வருகிறோம். மேலும் செயலி மூலமாக இந்தியா முழுவதும் உள்ள கூர்நோக்கு இடங்களை கண்காணித்தும் ஆய்வு செய்து. செயலி இணைப்பு இல்லாத இடங்களில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்.

இதுவரை தமிழக தமிழ்நாட்டில் சென்னை, கோயமுத்தூர், தஞ்சாவூர், திருச்சி ஆகிய இடங்களில் ஆய்வு நடத்தியுள்ளோம் இதனை தொடர்ந்து நாளை திருநெல்வேலியில் உள்ள கூர்நோக்கு இல்லத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளேன். திருச்சியில் இயங்கி வரும் கூர்நோக்கு இல்லத்தை மாவட்ட நிர்வாகம் சரியாக பராமரித்து வருகிறார்கள். மேலும். மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகள் சிறப்பான முறையில் நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளனர். இதைத் தொடர்ந்து இங்கு இருக்கும் சிறுவர்களை நேரில் சந்தித்து விசாரித்த போது எந்த குறைகளும் இல்லை என தெரிவித்தனர். திருச்சியில் இயங்கி வரும் கூர்நோக்கு இல்லத்தில் அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சி நான்கு மாவட்டங்களில் உட்பட்ட சிறுவர்கள்தான் இங்கு தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். இங்கு இடம்பற்றாக்குறை இருப்பதால் அவற்றை விரிவு செய்வதற்கு நடவடிக்கையில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஈடுபடுவதாக கூறியுள்ளார்.

குழந்தைகள் திருமணம் மற்றும் போக்சோ வழக்குகளை பற்றி அதிகமாக விழிப்புணர்வு ஏற்படுத்தியதன் மூலம் தான் அதிக குற்றங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது. குழந்தைகள் பாதுகாப்பு செயலில் ஈடுபடும் அனைத்து துறைகள் அதிகாரிகளையும் ஒன்றிணைத்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட உள்ளது. குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் மற்றும் புகார்களை உடனடியாக விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ள திருச்சியில் குழு அமைக்கப்பட்டும்.இதன் காரணமாக இரண்டு லட்சம் குடும்பங்கள் பயன்பெறும். குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் ஈடுபடுபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுப்பதால் தான் பலரும் மீண்டும் அந்த குற்றங்கள் செய்ய தயங்கி திருந்தி வாழ்கிறார்கள் என தெரிவித்தார். இந்த நிகழ்வின் போது திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *