தமிழகத்தில் கொரானா தொற்று 2ம் பரவலை தடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் உயிர் காக்கும் மருந்தான ரெம்டெசிவர் மருந்தை தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், சேலம் உள்ளிட்ட இடங்களில்அரசு மருத்துவமனை கட்டுப்பாட்டில் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. நோயாளிக்கு மருத்துவர் பரிந்துரைத்த மருத்துவ சீட்டு மற்றும் நோயாளிக்கான ஆதார் அட்டை, மருந்து வாங்க வந்திருக்கும் நபருடைய ஆதார் அட்டையும் பெற்று ரெம்டிசிவர் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.


கடந்த சனிக்கிழமை முதல் வழங்கப்பட்டு வருகிறது. தடுப்பூசி வாங்குவதற்காக
ஒவ்வொரு நாளும் காலை முதலே 200க்கு மேற்பட்ட மக்கள்
வருகின்றனர்.
சிலர் காலை முதலே நின்றும் சில நாட்களாக தடுப்பூசி வாங்க முடியாததால் வரிசையில் நின்ற மக்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு கண்டோன்மெண்ட் சரக காவல்துறை உதவி ஆணையர் மணிகண்டன் டிஆர்ஓ பழனிக்குமார் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பொதுமக்கள் மத்தியில் ஒரு நாளைக்கு 50 பேருக்கு மட்டுமே ரெம்டெசிவர் வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா நோயாளிகளுக்கு ரெம்டெசிவர் மருந்தின் தேவை அதிகமாக இருப்பதால் தினமும் 50 நபர்களுக்கு வழங்கும் ரேம்டெசிவர் மருந்தை கூடுதலாக உயர்த்தி வழங்க அதிகாரிகள் இடத்தில் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். மேலும், விற்பனை செய்யும் இடத்தையும் அதிகரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.