தமிழக வெற்றி கழகத்தின் மத்திய மண்டலத்திற்கான தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கூட்டம் திருச்சி மன்னார்புரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தலைமை நிர்வாகி அருள்ராஜ் தலைமையில் JCD பிரபாகரன், ராஜ்மோகன், மயூரி, பேராசிரியர் சம்பத்குமார்,. தேன்மொழி பிரசன்னா உள்ளிட்ட குழுவினர் முன்னிலையில் நடைபெற்றது. இந்தக் கருத்து கேட்பு கூட்டத்தில் திருச்சி, தஞ்சை, பெரம்பலூர். அரியலூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் விவசாயிகள், தொழில் அதிபர்கள் தேர்தல் அறிக்கையில் தவெக சார்பில் தேர்தல் அறிக்கையாக கொடுக்க வேண்டிய வாக்குறுதி குறித்தான மனுக்களை வழங்கினர்.

அதனைத் தொடர்ந்து அறிக்கை குழு தலைவர் அருண் ராஜ் பேட்டி அளிக்கையில் அவர் கூறியதாவது:-
எந்த அரசு பதவியிலும் இல்லாத விஜய் செய்தது ஊழல் கிடையாது. எதை வைத்து விஜய் ஊழல் செய்தார் என எடப்பாடி பழனிச்சாமி பேசுகிறார் என தெரியவில்லை. அவரை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது. வரி ஏய்ப்பு என பொத்தாம் பொதுவாக கூற கூடாது. காலம் தாழ்த்தப்பட்ட ஒரு ஆணை பிறப்பிக்கப்பட்டது அதை சட்டப்படி எதிர்த்து மனு தாக்கல் செய்தோம். நீதிமன்ற தீர்ப்பு விவகாரத்தில் மேல்முறையீடு செய்வது குறித்து முடிவு எடுக்கப்படும்.கூட்டணியை நம்பி த.வெ.க தொடங்கப்படவில்லை. இருந்தாலும் கூட்டணி குறித்து இறுதி முடிவை விஜய் அறிவிப்பார். அரசியல் கட்சிகள்ப் கூட்டம் நடத்துவது தொடர்பாக வழிக்காட்டல் நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் திமுக கூட்டம் நடத்தினால் உடனடியாக அவர்களுக்கு அனுமதி கிடைக்கிறது. .த.வெ.க வை பார்த்து திமுகவிற்கு பயம் வந்து விட்டது. அதனால் விஜய் மக்களை சந்திப்பதை தடுக்க முயற்சிக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்