திருச்சி கே கே நகர் பகுதியில் உள்ள ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா லிமிடெட் கம்பெனி செயல்பட்டு வருகிறது. இந்த கம்பெனியில் சுமை பணி தொழிலாளர்களாக 22 பேர் வேலை செய்து வருகின்றனர் இந்நிலையில் விஷால் அண்ட் கோ நிறுவனத்தின் ஒப்பந்ததாரர் தனசேகர் என்பவர் ஏழு வருடத்திற்கு இந்த கம்பெனியில் ஒப்பந்தம் போட்டுள்ளார் அதன் அடிப்படையில் ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா லிமிடெட் சுமை பணி தொழிலாளர்கள் பாதுகாப்பு சங்கத்தை சேர்ந்தவர்கள் ஒப்பந்தக்காரர் தனசேகரிடம் தினசரி கூலி நாளொன்றுக்கு 250 ரூபாய் இல் இருந்து 400 ரூபாயாக உயர்த்தி தரக்கோரியும் , டன் 25ல் இருந்து 40 ஆக உயர்த்தி தரக்கோரியும், அதேபோல் தொழிலாளர்களின் அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பிடம், தங்குமிடம், மற்றும் வேலை செய்யும் இடங்களில் மின் விளக்கை முறையாக சரி செய்து தரக்கோரியும், பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் அடிப்படை வசதிகள் கேட்டுள்ளனர்.
ஆனால் ஒப்பந்தக்காரர் இந்த கோரிக்கைகள் நிராகரித்துள்ளார். மேலும் இன்று காலை ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் கேட்டை பூட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது அதனைத் தொடர்ந்து வேலைக்கு வந்த சுமை பணித் தொழிலாளர்கள் பாதுகாப்பு சங்கத்தினர் மற்றும் தமிழ்நாடு புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியினர் ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா லிமிடெட் முன்பு தரையில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் . இது குறித்து தகவல் அறிந்து வந்த திருச்சி கே கே நகர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பணி சுமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் வருகிற செவ்வாய்க்கிழமை ஒப்பந்தக்காரருடன் பீஸ் கமிட்டி ஏற்பாடு செய்யப் பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் இந்த பீஸ் கமிட்டியில் சுமை பணிய தொழிலாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெறும் என தெரிவித்தனர்.