தமிழ்நாடு மின்வாரிய கேங்மேன் மற்றும் பணியாளர்கள் சங்கம் சார்பில் மின்வாரியத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் நான்கு ஆண்டுகளுக்கு மேலாக மின்சார வாரியத்தின் அனைத்து பணிகளையும் செய்து வரும் ஜங்மேன் பணியாளர்கள் தொடர்ந்து பல உதவியாளர் பதவி மாற்றம் வேண்டி கோரிக்கைகள் வைத்து வந்த நிலையில் அவர்களின் கோரிக்கைகளை அலட்சியமாக கருதி அவற்றை நிராகரிக்கும் வகையில் இன்று கலா உதவியாளர் பணிக்கு டிஎன்பிஎஸ்சி மூலமாக அறிவிப்பு வெளியாகி உள்ளது மேலும் 9613 கேங்மேன் பணியாளர்களின் உழைப்பையும் படிப்பு மற்றும் அனுபவத்தையும் அதன் மீதான நம்பிக்கையும் பாழாக்கும் விதமாக உள்ளது. மேலும் மின்சார வாரியம் மற்றும் தமிழக அரசின் செயலை கண்டித்து
கேங்மேன் பணியாளர்களின் கோரிக்கை ஊடாக நிறைவேற்றக் கோரி மின்சாரியா வாரியத்தின் அனைத்து மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் மற்றும் தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு மின்வாரிய கேங்மேன் மற்றும் பணியாளர்கள் சங்கங்களின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணைப் பொதுச் செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார் மாநில துணைத்தலைவர் இருதயசாமி மாநில செயலாளர் ஆனந்தபாபு வடிவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர் மேலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான தமிழ்நாடு மின்வாரிய கேங்மேன் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.