திருச்சி SDPI கட்சியினர் கோரனாவால் இறந்த பெண்ணை சுப்ரமணியபுரம் ஜெய்லானியபுரம் பள்ளிவாசல் அடகஸ்தலத்தில் நேற்று நல்லடக்கம் செய்தனர்.
கொரோனாவின் இரண்டாம் அலையின் கோர தாண்டவத்தால் திருச்சியில் நேற்று 70 வயது பெண்மணி நோய் தொற்றால் இறந்தார் இதனையடுத்து அக்குடும்பத்தினர் திருச்சி sdpi மாவட்ட தலைவர் அப்துல்லாஹ் ஹஸ்ஸானை தொடர்பு கொண்டனர். இந்த தகவலின் பேரில் மாவட்ட தலைவர் திருச்சி கிழக்கு தொகுதி செயலாளர் தமீம் அன்சாரி மற்றும் சுப்ரமணிய புரம் கிளையின் செயல்வீரர் ஷரீஃப் மற்றும் அஜ்மல் ,ஜாவித் பாஷா ஆகியோர் உடனடியாக செயல்பட்டு சுப்ரமணியபுரம் ஜெய்லானியபுரம் பள்ளிவாசல் அடகஸ்தலத்தில் கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல் அடிப்படையில் முறையான பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி நல்லடக்கம் செய்தனர்.