தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றின் 2-ம் அலையை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு கடந்த மே மாதம் 10-ம் தேதி முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் கோரோனா நோய்த்தொற்று பல மாவட்டங்களில் குறைந்து வருவதைத் தொடர்ந்து. 11 மாவட்டத்தைத் தவிர பிற மாவட்டங்களில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் இயங்கி வந்த மீன் மார்க்கெட்டுகளான காந்தி மீன் மார்க்கெட், புத்தூர் மீன் மார்க்கெட் விற்பனை இயங்கிக் கொண்டிருந்த நிலையில், தற்போது குழுமணி சாலையில் மீன் மார்க்கெட் மாற்றம் செய்யப்பட்டு மொத்த மீன் விற்பனை நடந்து வந்தது.
இங்கு பொதுமக்கள் சமூக இடைவெளியைப் கடைபிடிக்காமல் மீன் வாங்க மார்க்கெட்டில் கூடுவதால் தொடர்ந்து கொரோனா நோய் தொற்று ஏற்படுவதற்கான அபாயம் இருப்பதை கருத்தில் கொண்டு திருச்சி மத்திய ஜங்ஷன் பஸ் நிலையத்தில் மொத்த மீன் மார்க்கெட் இயங்கும் என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு அதன் படி இயங்கி வந்தது.
இங்கு மொத்த விற்பனைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது பொதுமக்களுக்கு யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதை எல்லாம் கண்டுக்கொள்ளாமல் கொரோனா நோய்தொற்றின் 3-ம் அலையை “இருகரம் கூப்பி” அழைக்கும் விதமாக பொதுமக்கள் வியாபாரிகள் பலர் மாஸ்க் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டமாக நின்றுகொண்டு மீன்களை வாங்கி செல்கின்றனர்.
Facebook
WhatsApp
Email
Messenger
Post navigation