கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு உத்தரவின்படி 02-08-2021 மற்றும் 03-08-2021 ஆகிய தேதிகளில் நடைபெறும் ஆடி கீர்த்திகை மற்றும் நாளை ஆடிப்பெருக்கை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள கோயில்களில் உள்ளே சென்று பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.
அதனையொட்டி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் கதவுகள் மூடப்பட்டது. வெளியில் நின்று சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள்.
திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில் கதவுகள் மூடப்பட்டு, வெளியில் நின்று சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள்.
இன்று ஆடிக்கிருத்திகை என்பதால் சாமிக்கு அபிஷேகம் செய்வதற்காக காவிரி ஆற்றில் இருந்து கோவில் யானை அகிலா மூலம் புனித நீர் கொண்டு வரப்பட்டது.
திருச்சி உறையூர் அருள்மிகு வெக்காளி அம்மன் கோயில் கதவுகள் மூடப்பட்டு, வெளியில் நின்று சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள்.
கோவில் கதவின் சாவி செலுத்தும் துவாரம் வழியாக சாமி கும்பிடும் சிறுமி.
திருச்சி மலைக்கோட்டை சுவாமிநாதன் திருக்கோயிலில் வெளியில் நின்று சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள்.
ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி ஆற்றில் பக்தர்கள் புனித நீராட தடை செய்யப்பட்டுள்ளது.
காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து செல்லும் பக்தர்கள்.