பாலியல் துன்புறுத்தலால் தற்கொலை செய்த கோவை பள்ளி மாணவியின் பெற்றோருக்கு நீதி வழங்கக் கோரியும், பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நிலை தமிழகத்தில் நிலவுவதை கண்டித்தும், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் மெத்தனப்போக்கை காட்டும் ஆளும் திமுக அரசை கண்டித்தும், கோவை பள்ளி மாணவி வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரி திருச்சி கலெக்டர் அலுவலகம் எதிரில் பாஜக மகளிர் அணி சார்பில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட மகளிர் அணி தலைவர் புவனேஸ்வரி தலைமை தாங்கினார்.
கட்சியின் மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். மகளிர் அணி மாநில செயலாளர் லீலா சிவக்குமார், துணைத்தலைவி உமா, பொதுச்செயலாளர் துர்கா தேவி, பொருளாளர் மலர்கொடி ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் செயலாளர் வேளாங்கண்ணி, ஹேமாமாலினி , தனலட்சுமி ,முன்னோடி பொறுப்பாளர்கள் வரகநெரி பார்த்திபன், கௌதம் நாகராஜன், கள்ளிக்குடி ராஜேந்திரன்,, கணேஷ், தொழில் பிரிவு ஸ்ரீராம், சந்தோஷ் குமார், மண்டல் தலைவர் சதீஷ் குமார் மல்லி செல்வம் மற்றும் திரளான கட்சியினர் பங்கேற்றனர்.