தமிழ்நாடு காவல் துறை இயக்குநர் சைலேந்திரபாபு இன்று மாலை திருச்சி கண்டோன்மெண்ட் போலீஸ் கிளப் அலுவலகத்தில் மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன், டிஐஜி ராதிகா, மாநகர போலீஸ் கமிஷனர் அருண் ஆகியோருடன் சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் திருச்சி மண்டலத்தில் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வரும் ரவுடிகள் மீது குண்டர் தடுப்பு சட்டம் உட்பட கடுமையான சட்டங்கள் மூலம் அவர்களை தண்டிக்க ஆலோசனை வழங்கினார் . ரவுடிகள் மீது உள்ள பழைய வழக்குகளை துரிதப்படுத்தி , அவர்களுக்கு அதிகபட்ச தண்டணை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கவும் , ரவுடிகளை சிறையிலடைக்க அறிவுரை வழங்கினார் . கட்டப்பஞ்சாயத்து , கந்துவட்டி , கஞ்சா கடத்தல் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவர்களை தரம்பிரித்து அவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளார்.