நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பகம் காப்பகமாக உள்ளது. வளர்ப்பு யானைகள் முகம் உள்ளது இங்கு தெப்பக்காடு, அபயாரணயம் இரு யானைகள் முகாமில் 28 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு முதுமலையிலிருந்து மசினி என்ற யானை திருச்சி சமயபுரம் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது அந்த கோவிலில் இந்த யானை பராமரித்து வந்த பாகனை கொன்ற சூழ்நிலையில் அந்த யானை கடுமையாக தாக்கப்பட்டு மீண்டும் முதுமலை கொண்டுவரப்பட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது.
தற்போது அந்த யானையை பாலன் என்ற பாகன் கவனித்து வந்த சூழ்நிலையை இன்று வழக்கம் போல அதற்கு உணவு அளித்துவிட்டு வனப் பகுதிக்கு அழைத்துச் செல்வதற்காக அதன்மேல் அமரும் போது இவரை தூக்கி வீசையான கடுமையாக தாக்கி உள்ளது. சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சூழ்நிலையில் தற்பொழுது கூடலூர் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளார். தான் வளர்த்த இரண்டு பாகன்களை இந்த யானை கொன்ற சூழ்நிலையில் அதற்கான காரணம் என்னவென்று தெரியாமல் வனத்துறையினர் திகைத்து வருகின்றனர்