இந்தியாவில் பாஸிச விரோத சக்திகளுக்கு எதிராகவும் அவற்றை முறியடிக்க வலியுறுத்தியும் சமூக ஒற்றுமையை நிலைநாட்டும் வகையிலும் இடதுசாரி கட்சிகள் மற்றும் வி.சி.க இணைந்து மனித சங்கிலி நடத்த அழைப்பு விடுத்திருந்தனர்.
அந்த மனித சங்கிலியில் காங்கிரஸ், ம.தி.மு.க உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் தி.க, மக்கள் அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு ஜனநாயக அமைப்புகளும் கலந்து கொள்வதாக அறிவித்திருந்தன. அதன்படி மனித சங்கிலி இன்று நடைபெற்றது.
மனித சங்கிலி திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே தொடங்கி பாலக்கரை வரை சுமார் 3 கி.மீ தூரம் நடைபெற்றது. இதில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த மனித சங்கிலியில் பெற்ற சுதந்திரத்தை பாதுகாப்போம், மக்கள் ஒற்றுமையை பாதுகாப்போம், கூட்டாட்சி கொள்கைகளை பாதுகாப்போம் உள்ளிட்ட பல்வேறு முழக்கங்களை எழுப்பினர்.