சர்வதேச உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு திருச்சி தில்லைநகர் கி.ஆ.பெ.விசுவநாதம் மேல்நிலைப்பள்ளியில் தொடர்ந்து 8 மணி நேரம் சிலம்பம் சுற்றி ஆங்கிலோ இந்தியன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி கலைஇளமணி சுகித்தா புதிய உலக சாதனை படைத்தார். அவருடன் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப்குமார் அவர்களின் மகன்கள் மித்ரன் மற்றும் பிரஜன் ஆகியோர் சிலம்பம் சுற்றி சாதனை படைத்தனர்.இந்த மூவரின் சாதனைகள் துபாயில் இயங்கி வரும் ஐன்ஸ்டன் உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டது.

இந்த உலக சாதனையை துபாயில் இருந்து வருகை புரிந்த ஐன்ஸ்டன் புத்தக இயக்குனர் கார்த்திக்குமார் மற்றும் நிர்வாக இயக்குனர் மோனிகா ரோஷினி ஆகியோர் ஆய்வு செய்து உலக சாதனை சான்றிதழை வழங்கினார்கள்.மேலும் அமெரிக்க உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற 280 க்கும் மேற்பட்ட சிலம்ப வீரர்கள் சுழற்சி முறையில் ஒரு குழுவிற்கு 40 பேர் என 7 குழுவாக ஒரு மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை படைத்தார்கள். இந்த சாதனையானது அமெரிக்காவில் இயங்கி வரும் அமெரிக்க உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது.

நிகழ்ச்சிக்கு உலக சிலம்ப இளையோர் சம்மேளன இந்திய தலைவர் டாக்டர். செந்தில்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப்குமார் கலந்து கொண்டு சாதனை சான்றிதழை வழங்கினார்.

மேலும் திருப்பராய்த்துறை ராமகிருஷ்ண தபோவன ஸ்ரீமத் சுவாமி கங்காதரானந்தா, கொடைக்கானல் விவேகனந்த வித்யாலையா பள்ளி செயலர் சாதனை மாணவர்களுக்கு நினைவு பரிசினை வழங்கினார்கள். முன்னதாக இருதய சிகிச்சை நிபுணர் டாக்டர்.கிருஷ்ணன், டாக்கடர்.கவிதா செந்தில் மற்றும் பத்மஸ்ரீ. தாமோதரன் ஆகியோர் இந்நிகழ்ச்சியை துவங்கி வைத்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் உலக சிலம்ப இளையோர் சம்மேளன தலைவர் .மோகன், துணைத் தலைவர் வரகனேரி ரவிச்சந்திரன், மாணிக்கம், மணிகண்டன், ராஜ்குமார் மற்றும் நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். இச்சாதனை நிகழ்ச்சியை உலக சிலம்ப இளையோர் சம்மேளனம் மற்றும் மன்னை மகாலிங்கம் சிலம்ப சங்கம் இணைந்து செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்